காலிமனை மற்றும் கட்டுமான
நிறுவனங்களிடம் இருந்து குடியிருப்பை வாங்குவதற்கு முன் முக்கியமாக தெரிந்து கொள்ள
வேண்டிவை மற்றும் கடைப்பிடிக்க வேண்டியவை:
காலிமனை குறித்து தெரிந்து கொள்ளுதல்:
மனையை விற்பவரிடம் இருந்து அது
குறித்து அறிந்து கொள்தல் முக்கிய கடமை.
சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியாக
இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்திடம்
(சிஎம்டிஏ) அனுமதி பெற்ற வரைபடம் மற்றும் விலை நிர்ணய சான்றையும் சரி பார்க்க
வேண்டும். மேலும் இதர நகர பகுதியாக இருந்தால் நகராட்சியின் அனுமதி சான்றை
கவனிக்கவும்.
சாலைகள் மற்றும் பூங்காக்கள்
அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சாலையோரம் மனை அமைந்திருந்தால்,
அது உள்ளூர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுமா
என்பதை அறிய வேண்டும்.
சிஎம்டிஏவின் கட்டுப்பாட்டு விதிமுகைள்
பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பது உட்பட மனைக்கான உரிய ஆவணங்கள், சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மனை
வாங்கிய இடத்தில் வீடு கட்டிய பின் எதிர்காலத்தில் ஏதேனும் காரணங்களுக்காக வீடு
இடிக்கப்படுதல் போன்ற பிரச்னை வராமல் சரியாக கையாள வேண்டும்.
வீடு வாங்குவதற்கு முன் கருத்தில்
கொள்ள வேண்டியவை:
கட்டுமான நிறுவனம் அல்லது தனியாளிடம்
இருந்திடம் இருந்து வீடு வாங்குவதற்கு முன் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு
முறையான வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளனவா என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள
வேண்டும்.
கட்டுமானம் நிறுவனம் அனுமதி வாங்கியபடி
குடியிருப்பை திட்டமிட்டு கட்டியுள்ளதா அல்லது ஏதேனும் விதி மீறல்கள் நடந்துள்ளனவா
என்பதை அறிய வேண்டும்.
குடியிருப்பின் உண்மையான உரிமையாளர்
மற்றும் அதன் பங்குதாரர்கள் குறித்து கேட்டறிய வேண்டும்.
நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளனவா
என்பதுடன், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்
சிஎம்டிஏ முழுவதும் சோதனை செய்துவிட்டதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மனையோ அல்லது வீடோ வாங்குவதற்கு முன் அதுகுறித்து சிஎம்டிஏவிடம் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் உட்பட தனக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கேட்டறிதல் மிகவும் முக்கியம்.
6:44 PM
Raja

